இந்த குட்டி தீவில் சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய பல இடங்கள் உண்டு. இன்று நாம் நீருக்கடியில் இருக்கும் சுற்றுலாத்தளம் பற்றி தான் பார்க்க போகிறோம்.

இலங்கை நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையில் சுற்றுலா பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாக இருப்பதனால், இந்த நீருக்கடியில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகங்கள் மக்களை ஈர்த்து, அதனூடாக வருமானம் ஈட்டித்தரக் கூடியதாக அமைகிறது.

இந்த அருங்காட்சியகங்கள் இலங்கையின் மூன்று முக்கிய கடற்பிரதேசங்களான திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.

இலங்கையின் முதலாவது நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகம் காலியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி காலி துறைமுகத்திற்கு அருகில் திறக்கப்பட்டது.

குறித்த அருங்காட்சியகத்தின் அனைத்து கட்டுமானங்களும் கடற்படையினரால் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, சீமெந்து மற்றும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களினால் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது ஓர் சிறப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *