இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தின பேரணியும், கூட்டமும் இன்று ஹட்டனில் நடைபெற்றது.
ஹட்டன் கார்கில்ஸ் புட்சிட்டிக்கு முன்பாக சங்கத்தின் தலைவர் நிஷாந்த வன்னியாராச்சி தலைமையில் ஆரம்பமான மே தின பேரணி, அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபம் வரை சென்றடைந்தது.
அதன்பின்னர் மே தின கூட்டம் நடைபெற்றது.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர், உப தலைவர் உட்பட அங்கத்தவர்களும், ஏனையோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
தொழில் பாதுகாப்பு, வாழ்வுரிமை உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்னிறுத்தியே மே தின பேரணியும் கூட்டமும் நடைபெற்றது.