வேண்டும் வேண்டும் அநியாயமாக மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாருக்கு நீதி வேண்டும் அத்துடன் இத் தாயின்  மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து  நுவரெலியா கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட உத்தியோகஸ்தர்களான பி. அம்பிகை மற்றும் ஜே.கிருஷாந்தி ஆகியோரால்  முன்னெடுத்த இந்த போராட்டத்தில் கந்தப்பளை மற்றும் இராகலை பகுதிகளில் உள்ள தோட்டங்களை சேர்ந்த மக்கள் கலந்துக் கொண்டனர்.

இதன் போது குடும்ப பொருளாதார சுமையை சுமந்து கொண்டு பதுளையில் இருந்து கொழும்பில் வீட்டில் பணியாளராக வேலை செய்து வந்த இந்த இளம் தாய் மீது திருட்டு குற்றம் சுமத்தி பொலிஸ் முறைப்பாடு செய்து வெலிக்கடை பொலிஸ்  நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு விசாரணையில் மரணமடைந்துள்ளார்.

இவரின் மரணம் மர்மமான, நியாயமற்றது ஆக இந்த இளம் தாயின் நியாயமற்ற மரணத்திற்கு நீதி வேண்டும் என்றே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *