காலநிலை மாற்றம் காரணமாக உலக சராசரி வெப்பநிலை அதிகரித்து வருவதால் அதனை குறைப்பதற்கு
உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாற்றுவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக காலநிலை மாற்ற தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவித்தார்.

இதன் மூலம் காற்று, பசுமை ஹைட்ரஜன் மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதால் கார்பன் உமிழ்வு குறைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *