இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மின்சார மறுசீரமைப்பு திட்டங்கள் மற்றும் அத்துறையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் காற்றாலை மின் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு உலக வங்கி வழங்கிய நிதியுதவிக்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர நன்றி தெரிவித்துள்ளார்.