இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கலை பொக்கிஷங்களை மீள ஒப்படைப்பதாக நெதர்லாந்து அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி அலிசாப்ரி அவர்கள் நெதர்லாந்து அரசாங்கத்தின் கலை மற்றும் ஊடக செயலாளர் உடன் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார் இந்த இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், மேலும் விஸ்தரிப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
டச்சு ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆறு கலை பொக்கிஷங்களை மீளவும் இலங்கையிடம் ஒப்படைப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.