இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியற் செயற்பாடுகள் குறித்த விசேட கூட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சரூமான ஜீவன் தொண்டமான் தலலமையில் இந்த கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கூட்டம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கட்சியின் எதிர்கால செயற்த்திட்டங்கள் தொடர்பாக கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் எனது தலைமையில் கட்சியின் மாவட்ட தலைவர்கள், தலைவிமார்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் என்னுடன், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், திருமதி.அனுஷியா சிவராஜா, பிரதி பொது செயலாளர் செல்லமுத்து, உப தலைவர்களான பிலிப்குமார், எஸ்.ராஜமணி, கந்தசாமி நாயுடு, திருமதி. செண்பகவள்ளி, சிவலிங்கம், திருக்கேதிஸ்வரன், பாஸ்கரன், முன்னாள் பிரதேச சபை தலைவர்கள், கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள், மாவட்ட தலைவர், தலைவிமார்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.என கூறி இருக்கிறார்.