இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் கீழ் இயங்கும் செனல் “eye” நிறுவனத்தை லைக்கா நிறுவனத்திற்கு குத்தகை கொடுக்க போகும் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து , பெருந்தெருக்கல் அமைச்சர் பந்துல்ல குணவர்தன கூறுகிறார்.
கொழும்பில்த நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதன கூறினார்.
மேலும் நட்டத்துடன் இயங்கும் குறிப்பாக மின்சார கட்டணம் கூட செலுத்த முடியாத செனல் eye நிறுவனத்தை விற்கவோ குத்தைக்கு கொடுக்கவோ நான் முயற்சிக்கவில்லை.
செனலின் ஒளிபரப்பு நேரத்தை மட்டுமே குத்தகைக்கு கொடுத்து உள்ளேன்.
இதன் மூலம் 25 மில்லியன் ரூபா மாதாந்த வருமானம் கிடைக்கும். லைக்கா நிறுவனம் கிரிக்கெட் உட்பட ஏனைற போட்டிகளை ஒளிப்பரப்பு செய்யும்.
இந்த ஓப்பந்ததை எப்போது வேண்டுமானாலும் முறிக்கலாம் ஒரு மாத அறிவிப்பை வழங்கினால் போதும் குறிப்பாக வேறு எதாவது நிறுவனம் கூடிய பணத்தை தருவதாக சொன்னால் டென்டரை கோருவோம் என அமைச்சர் கூறினார்.
இதேவேளை சக்தி தொலைக்காட்சியின் நியுஸ் பெஸ்ட்டில் கூறிய தகவல்
இந்நிலையில் ஆளுந்தரப்பு பாரளுமன்ற உறுப்பினர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக கூறியமை குறிப்பிடதக்கது.
இஇந்நிலையில் வழமை போன்று குழப்பத்தில் நாங்களும் மக்களும் இருக்கிறோம் என சிரேஷ்ட ஊடகவியலாளரொருவர் எமக்கு சொன்னார்.