கனடாவில் பெண் ஒருவரின் உயிர் ஐபோன் ஒன்றின் மூலமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பெண்ணின் பெற்றோர் இந்த தகவல்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஹமில்டன் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வயதான ஹான்னா ரால்ப் என்ற யுவதி கிராமிய பகுதியான பிளஸ்செர்டன் பகுதியில் தனியாக வாகனத்தை செலுத்திச் சென்றுள்ளார்.
இதன் போது ஏதோ ஓர் காரணத்தினால் குறித்த வாகனம் மரம் ஒன்றில் மோதுண்டுள்ளது மிகவும் பின் தங்கிய கிராமிய பகுதி, ஆள் நடமாற்றமற்ற பகுதி என்பதனால் விபத்துக்குள்ளான போது அவருக்கு யாரும் உதவி செய்ய அருகில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த யுவதியின் ஐபோன் மூலம் அவருக்கு ஆபத்து நேர்ந்த விடயம் தொடர்பில் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து குறித்த யுவதியின் பெற்றோர் விரைந்து செயல்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த குறித்த யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.