கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்பகுதியில் விபத்துக்குள்ளான மீன்பிடி கப்பலில் சுமார் 750 குடியேற்றவாசிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சுமார் நூறு பேர் சிறுவர்கள் என சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவின் மிக மோசமான புலம்பெயர்ந்தோர் படகு விபத்தாக கருதப்படும் இந்த விபத்தில் 78 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
104 பேர் கிரேக்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத குடியேற்ற மனித கடத்தலில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் எகிப்தியர்கள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.