ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கோர விபத்து எப்படி நடந்தது? மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை, மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரண விபரங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து கட்டாக் மருத்துவமனைக்கு செல்லும் பிரதமர் அங்கு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.