முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
ஒன்றாரியோ அரசாங்கத்தின் பசுமை பகுதி வீடமைப்பு திட்டம் தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இந்த வீடமைப்பு திட்டத்தின் போது ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண வீடமைப்பு அமைச்சின் பிரதம அதிகாரி ரயன் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குறிப்பாக வீடமைப்பு திட்டத்திற்கான கட்டுமான நிறுவனங்களை தெரிவு செய்யும் போது பக்கச்சார்பாக செயற்பட்டதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரபூர்வ விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.