(எஸ்.அஷ்ரப்கான்)
மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.
கந்தளாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாடசாலைகளுக்கிடையிலான ‘மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி – 2023 ‘ இல் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவனான எம்.ஏ.ஆர்.ஹாபீஸ் ரய்ஹான் 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தைப் வென்றுள்ளார்.
இம்மாணவன் 60 மீற்றர், 100 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சிகளில் முறையே 02, 03ஆம் இடங்களையும் பெற்றுள்ளார்.
இவரைப்பயிற்றுவித்த பொறுப்பாசிரியர் ஆர்.நெளசாத் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.அஸ்மத் சஹி, உட்பட ஊக்கப்படுத்திய இணைப்பாடவிதானத்துக்குப் பொறுப்பான உதவி அதிபர் எம்.எச்.எம். நசீம், பிரதி அதிபர் எம்.ஏ.கமறுன்நிஸா மற்றும் அதிபர் அஷ்ஷேய்க் யு.கே.அப்துர் ரஹீம் ஆகியோருக்கும் பாடசாலைச் சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.