இலங்கையின் கடன் மறுசீரமைப்பை ஒரு பிணைப்பு செயல்முறை அல்லது பொதுவான பொறிமுறையின் மூலம் செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“தற்போதைய உலகம் எதிர்நோக்கும் நெருக்கடியான சவால்களுக்கு தீர்வு காண்பது” என்ற தொனிப்பொருளில் பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.