கனடா மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் காட்டுத் தீ அனர்த்தம் காரணமாக பலர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியே தீர்மானித்துள்ளனர்.

அங்குஸ் ரீட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

காட்டுத் தீயினால் ஏற்படக்கூடிய அபாயங்களை தவிர்க்கும் வகையில் இவ்வாறு புதிய இருப்பிடங்கள் நோக்கி நகர மக்கள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கனடாவில் நிலவி வரும் காட்டுத் தீ அனர்த்தம் காரணமாக இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.

35 வயதுக்கும் குறைந்த பெண்களே அதிகளவில் சொந்த இடங்களை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.

கனடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் சுமார் 237 இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் மிக மோசமான காட்டுத் தீ அனர்த்தம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *