ஹவாய் காட்டுத்தீ விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டிய நிலையில் கனடாவின் வடமேற்கு மாகாணங்களிலும் கட்டுங்கடங்காமல் காட்டுத்தீ பரவுகிறது.
தெற்கு மற்றும் வடமேற்கு ஸ்லேவ் பகுதிகளில் நிலைமை கைமீறி போனதாக கனேடிய அரசாங்கம் அறிந்துள்ளது.
காட்டுத்தீ பரவி இருக்கும் பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தி மீட்புப்பணியில் மீட்பு பணிவீரர்களை கனடா களம் இறக்கியுள்ளது.
ஹவாய் தீவுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் விஜயம்
இந்நிலையில் தீயியல் கருகிய ஹவாய் தீவுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் செல்ல உள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுக்கு ஏராளமான வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்காக அங்கு செல்வர்.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஹவாய் தீவின் மேற்கே உள்ள மவுய் நகரில் காட்டுத்தீ பிடித்தது.