கனடா நாட்டின் வின்னிபெக் மாகணத்தில் அண்மையில் நடைபெற்ற #WorldPoliceFireGames போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 15 காவலர்களும், தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 4 காவலர்களும் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 21 தங்கம் – 18 வெள்ளி – 15 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.
இவர்களை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மொத்தம் 54 பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்த நம் காவல்துறை – தீயணைப்புத்துறை வீரர் – வீராங்கனையரை அவர் இன்று வாழ்த்தியுள்ளார்