கனடாவில் குரங்கம்மை நோய் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில் கூடுதலாக குரங்கம்மை நோய்த் தாக்கம் பதிவாகும் பத்து நாடுகளின் வரிசையில் கனடாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரையிலான காலப் பகுதியில் 89308 குரங்கம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
கனடாவில் இதுவரையில் 1440 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.