கனடாவில் புதிய கடவுச்சீட்டு தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கடவுச்சீட்டை பயன்படுத்தும் பிரஜைகள் கடவுச்சீட்டு தரம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
கனடிய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு நான்கு நாட்களிலேயே அந்த கடவுச்சீட்டு சுருள்வதாகவும், விரிந்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பழைய கடவுச்சீட்டில் இவ்வாறான எந்த பிரச்சனையும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த புதிய கடவுச்சீட்டு மடங்குவதாகவும் சுருள்வதாகவும் பயனர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
புதிய கடவுச்சீட்டு வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய காரணிகளின் அடிப்படையில் சுருள்வதாக தெரிவிக்கப்படுகிறது.