சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ரப் அலீ
கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடாத்த போவதாகவும் முதல் கட்டமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் நடாத்த போவதாகவும் உதய கம்மன் பில தெரிவித்திருந்தார்.
அத்துடன் தெற்கில் உள்ள சிங்கள மக்கள்தான் மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்த பொழுது…
உதய கம்மன் பில போன்றவர்களது இனவாத கருத்துக்களால் எம்மை அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கி விட முடியாது. நாம் அவர்களது இனவாத செயற்பாடுகளை தொடர்ந்தும் அம்பலப்படுத்துவோம
தமிழ் மக்கள்தான் தெற்கில் இன்றுவரை தொடர்ச்சியாக வேட்டையாடப்படுகின்றனர்.
தெற்கில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்துத்தான் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. நாங்கள் தெற்கில் பாதுகாப்பாக இருந்திருந்தால் எவ்வாறு எனது தந்தை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார் ?
போர்க்காலத்தை விட தற்காலமே மோசமானது. #போர்க்காலத்தில் புலிகள் இருந்தார்கள். தமிழர் மீது கை வைத்தால் அடி விழும் என்று தெரியும். இப் பொழுது எந்தவொரு கவசமும் இன்றி வாழ்ந்து வருகின்றோம்.
சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக வடக்கு கிழக்கு மக்கள் செயற்படவில்லை.
வடக்கில் உள்ள பல்கலைக் கழகங்களில் சிங்கள மாணவர்கள் கற்கின்றனர். தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை கூட தட்டிப் பறித்து சிங்களவர்கள் வடக்கு கிழக்கிற்கு வருகின்றனர். அவர்களை சிங்களவர்கள் என்பதால் தமிழ் மக்கள் ஒன்றும் செய்யவில்லையே ?
போர்க்காலத்திலும் புலிகள் விகாரைகளை பாதுகாத்தனர். தற்பொழுது தொல் பொருள் என்று சொல்லிக் கொண்டு தமிழ் பௌத்த இடங்களை சிங்களமாக படை மாற்றுகின்றனர்.
.கம்மன் பில போன்றவர்கள் எங்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி அடக்கி ஒடுக்கலாம் என நினைக்க கூடும். ஆனால் அது கனவிலும் நடந்தேறாது என்பதை அவருக்கு சொல்கின்றேன் என்றும் தெரிவித்தார்