“பதவியை பெறுவதற்காக முதுகில் குத்தவோ, மிரட்டவோ மாட்டேன்” என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அவர் இன்று டெல்லி சென்றார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
தேர்தல் முடிவுகள் வெளியாக இரண்டு நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று தீர்மானிப்பதில் காங்கிரஸ் கட்சியில் இழுபறி நிலவி வருகிறது.
மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்க நடந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அந்த பொறுப்பு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.