16 ஆவது IPL தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இறுதிப்போட்டிக்கான குவாலிபயர் 2 போட்டியில் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஏற்கனவே, இறுதிப்போட்டிக்கு நுழைந்த சென்னை அணியை குஜராத் எதிர்கொள்ள உள்ளது.
இதன் மூலம் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்துடன் கிண்ணத்தை கைப்பற்றும்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு போட்டி தொடங்குகிறது.
CSK 4 முறையும், GT 1 முறையும் IPL கிண்ணத்தை வென்றுள்ளன்.
குஜராத் அணி இரண்டாவது முறையாக கிண்ணத்தை வெல்லுமா ? அல்லது நடப்பு சாம்பியனிடம் இருந்து பட்டத்தை சென்னை தன்வசமாக்குமா?