நூருல் ஹுதா உமர்
கடந்த 18 வருடங்களுக்கு மேலாக கல்முனையில் இயங்கி வரும் தாருல் அர்கம் முன்பள்ளி பாடசாலையின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலை முகாமைத்துவப் பணிப்பாளர் அமீர பாறூக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்முனை கமு/கமு/ அஸ்-ஸூஹறா வித்தியாலய அதிபர் திருமதி எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா அவர்களும், அம்பாறை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் முஹம்மது அஸாருதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வுக்கு முன் பள்ளி பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.