நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி தொடர்பான புதிய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதில் தானும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று (25) காலை கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூற்றாண்டு விழாவுடன் இணைந்ததாக வித்யாபிமானி கல்விக் கண்காட்சியம் கலை விழாவும் மூன்று நாட்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.