யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டின் மூலம் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட இரண்டு கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பொதுவான இறங்குதுறை மற்றும் மீன் சந்தை போன்ற பொதுவானதாக இருந்து வருகின்ற நிலையில் வற்றை பகிர்ந்து கொள்வது தொடர்பில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டினையே கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார்.

குறித்த விவகாரம் அமைச்சரின் கவன்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று (14.10.2023) சம்மந்தப்பட்ட காக்கைதீவு பகுதிகுக்கு நேரடியாக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்களினது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

பின்னர், இரண்டு கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளையும் தனது யாழ் அலுவலகத்திற்கு வரவழைத்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய, இரண்டு தரப்பினரும் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு இறங்கு துறையையும் மீன்சந்தை பிரதேசத்தினையும் சுமூகமாக பகிர்ந்து கொண்டு தொழிலை முன்னெடுக்க சம்மதம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு – கடற்றொழில் அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *