காசாவுக்கு 832 அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு தமது ஆதரவை வழங்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இஸ்ரேலின் மத்தியப் பகுதிக்கு போர் கப்பல்களை அனுப்புவதற்கும் அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.