(வாஸ் கூஞ்ஞ)
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினம் இன்றாகும்.
இப்போராட்டமானது வடக்கு தழுவிய சமூக அமைப்புக்களினால் காலை 10.30 மணிக்கு மன்னார் சதொச மனித புதைகுழிக்கு அருகில் இருந்து ஆரம்பமாகி மன்னார் நகரசபை விளையாட்டு மைதானம் வரை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக குரல் எழுப்பி சர்வதேசமே இதில் கவனம் செலுத்து என்ற கோரிக்கைகளை முன்வைத்து தங்கள் கரங்களில் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களை கையேந்தியவர்களாகவே நடைபவனியாக வந்தனர்.
இப்போராட்டத்தில் வடக்கு கிழக்கு பகுதியிலுள்ள எட்டு மாவட்டங்களிலிருந்தும் அதாவது மன்னார் . வவுனியா , கிளிநொச்சி . முல்லைத்தீவு , யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு , அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆண் பெண் என இரு பாலாரும் கலந்து கொண்டனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டத்தின் போது மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் . நீண்டகாலமாக மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் அருட்பணி எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் , அருட்பணி நேரு அடிகளார் உட்பட இதன் தொடர்பான அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மன்னார் பொது விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பலர் உரையாற்றியதுடன் ஐ.நாவுக்கு அனுப்பி வைப்பதற்காக அங்கு கலந்து கொண்ட அருட்தந்தையர்களிடம் எட்டு மாவட்டத்திலுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் தலைவிகளால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
(வாஸ் கூஞ்ஞ)