போட்டித்தன்மையுள்ள பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காணிச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்கள் தொடர்பில் விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என கலாநிதி ஆர். எச். எஸ் சமரதுங்க வலியுறுத்தினார்.
அதற்கான சட்ட வரைபு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நுவரெலியாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.