கிரிக்கெட்டின் ராஜா யாருடா? யாழ் கிங்ஸ் கூறடா! காலியை வீழ்த்திய யாழ்!
யாழ் kings மற்றும் காலி Titans அணிகளுகிடையில் பல்லேகலையில் இன்று நடைப்பெற்ற (LPL2023)T20 போட்டியில் யாழ் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதுடன் புள்ளிகள் மற்றும் ஓட்ட வேகத்தில் பட்டியலில் முதலாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற காலி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆனாலும் யாழ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
குறிப்பாக இலங்கை அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான துனித் வெல்லாலேகேயின் துள்ளியமான பந்துக்கு திணறியது.
அவர் தனது 4 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தெரிவானர்.
ஸ்கோர் விபரம்
காலி டைட்டனஸ் அணி தனது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் காலி அணி சார்பாக தசுன் சானக்க 30 ஓட்டங்கள், சேவொன் டெனியல் 25 ஓட்டங்கள்.
யாழ் கிங்ஸ் : ஆப்கானிஸ்தான் வீரரான ராமனுல்லா குர்பாஸ் 54 ஓட்டங்கள்மற்றும் டோவுட் ஹீரிடீ 44 ஓட்டங்களுடன் 12 . 4 ( 44 பந்துகள் மிகுதியாக இருக்க) ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்று அமோக வெற்றியை பெற்றனர்.
எவ்வாறாயினும் இந்த போட்டியில் யாழ் கிங்ஸ் அணி சார்பாக விளையாடிய யாழ் மைந்தன் வியாஸ்காந் 3 ஒவர்களுக்கு 35 ஓட்டங்களை கொடுத்து யாழ் ரசிகர்களை கவலையடைய செய்தார். ஆயினும் யாழ் அணி வெற்றி பெற்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்