பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் உயர்மட்ட தளபதி காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
காஸா பகுதியின் தெற்குப் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தளபதியும் மற்றுமொருவரும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (10) காஸா பகுதியில் 460க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது தீவிரவாதிகளால் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
09 மாதங்களுக்குப் பின்னர் காஸா பகுதியில் இடம்பெற்ற மோசமான மோதல்களாகக் கருதப்படும் காஸா பகுதியில் உள்ள சுமார் 130 இலக்குகள் மீதும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.