இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனகவுக்கு எதிர்வரும் ஐ.பி.எல் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் முதலாவது ஒரு நாள் போட்டியில் 88 பந்துகளில் 108 ரன்கள் நொறுக்கினார்.
இதனால் அவருக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டம் கிட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
“ஷனக்க தன்னிடம் உள்ள திறமை என்ன என்பதை உலகுக்கு நிரூபித்து காட்டியுள்ளார். அதிரடியாக ஆடக்கூடிய அவரை நிச்சயம் ஐ.பி.எல். அணிகள் கவனத்தில் வைத்திருக்கும். ஐ.பி.எல். வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்”என்றார்.
தசுன் ஷனக்கவை இது வரை எந்த ஐ.பி.எல் அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.