உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கில்க்கு அபராதம் விதிக்க ICC நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, போட்டி கட்டணத்தில் 15மூ அபராதமாக வசூலிக்க கிரிக்கெட் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஓவல் மைதானத்தில் நடந்த இந்தியா-அவுஸ்திரேலிய இடையேயான போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நான்காவது நாளில், கேமரூன் கிரீனின் கேட்ச் மூலம் கில் ஆட்டமிழந்தார்.
அந்த கேட்ச் பற்றி கில் விமர்சனக் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
போட்டியின் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேவையான ஓவர்களை வீசாத இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்க ICC முடிவு செய்தது.
அதன்படி, இந்திய அணி போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலிய அணி போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் செலுத்த வேண்டும்.
இந்த அபராதம் காரணமாக, கில் செலுத்த வேண்டிய மொத்த அபராதம் போட்டி போட்டி கட்டணத்தில் 115மூ ஆகும்.