கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்ட விரோத மணல் அகழ்வு பூரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளும் பூரணமாக கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அதிகாரிகளினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.

 

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று(16.09.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த விசேட கூட்டத்தினை தொடர்ந்து, அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இரணைமடு பகுதிக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அரச மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், குறித்த பகுதியில் அண்மைய நாட்களில் மணல் அகழ்வு இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை, மறுஅறிவித்தல் வரை மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு இன்றைய கூட்டத்தில் அறிவவுறுத்தியுள்ள கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் செவ்வாய் கிழமையில்(19.09.2023) இருந்து அமுலுக்கு வரும் அனுமதி பெற்ற மணல் அகழ்வு மற்றும் மணல் ஏற்றும் செயற்பாடுகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்துமாறும் தெரிவித்துள்ளதார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வை முழுமையாக நிறுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு: கடற்றொழில் அமைச்சர். – 17.09.2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *