நூருல் ஹுதா உமர்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்து வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.