பாகிஸ்தான் ஆப்கான்ஸ்தான் அணிகளுகிடையில் இலங்கையில் நடைப்பெறும் மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1 விக்கெட்டினால் த்ரிலர் வெற்றியை பெற்றது.
இதன்படி 2- 0 என்ற கணக்கில் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்ப விக்கட்டுக்காக 227 ஓட்டங்களை பெற்றது. இப்ராஹும் சத்ரான் 80 ஓட்டங்கள் பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி அதிக ஓட்டங்களை எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த போதிலும் பாகிஸ்தானிய களத்தடுப்பாளர்கள் ஓட்டங்களை மட்டுப்படுத்தினர்.
ஆயினும் ரமனுல்ல குர்பாஸ் திறமையாக ஆடி 151 ஓட்டங்களை பெற்றார்.
இதன்படி தங்களது 50 ஓவராகளில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு ஆட வந்த பாகிஸ்தான் அணியின் ஆரம்ப விக்கெட்டான ப்பாக்கர் ஷமானை 70 ஓட்டங்கள் பெற்ற போது இழந்தது. இதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் பாபர் அசாம் நிதானமாக இனாமூல் ஹக்குடன் ஜோடி சேர்ந்து ஓட்ட எண்ணிக்கையை 170 வரை கொண்டு சென்றார்.
இதன் பின்னர் குறிப்பாக எவரும் இணைந்து ஆடாத போதிலும் இனாமூல் ஹக் சிறப்பாக ஆடி 91 ஓட்டங்களை எடுத்தார். அந்நேரம் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது .
அணியை காப்பாற்ற ஹீரோவாக உள்ளேநுழைந்த சதாப் கான் அதிரடியாக ஆடி 35 பந்துகளுக்கு 1 சிக்ஸர் 3 பவண்டரிடகளுடன் 48 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றியின் விளிம்பிற்கு கொண்டு சென்றார்.
அத்துடன் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.
பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக பாறுக்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மூனுறாவது போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும்.