கூட்டு முயற்சிக்கான சிறந்த சாட்சியாக ஹெம்மாதகம நீர் வழங்கல் திட்டம் அமைந்துள்ளதாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் ஆர். டெமெட் செகர்சியோக்லு (R.Demet Sekercioglu) தெரிவித்தார்.
இலங்கை மக்களின் இயல்பு வாழ்வை கட்டியெழுப்புவதற்காக வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் தனித்துவமான மைல்கல்லாக அமைந்துள்ள இந்தத் திட்டம் அமைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தூதுவர், ஆயிரக்கணக்கான மக்களின் தாகத்தைத் தணித்தல், சுகாதாரத்தைப் பாதுகாத்தல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட கூட்டு முயற்சி இது எனவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் (20) ஹெம்மாதகம நீர் வழங்கல் திட்டத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே துருக்கி நாட்டுத் தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.