எம நாசர் .
தாருல் ஈமான் இலக்கிய வட்டம் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி – கொழும்பு பிராந்தியம். ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த “ஹிஜ்ரத்” கவியரங்கம் நேற்றைய (15-08-2023,) தினம் இடம்பெற்றது
கொழும்பு, தெமட்டகொட வீதியிலுள்ள தாருல் ஈமான் (இஸ்லாமிக் புக் ஹவுஸ்) கேட்போர்கூடத்தில் நடைப்பெற்ற கவியரங்கிற்கு சிரேஷ்ட சட்டத்தரணியும் இலக்கியவாதியுமான கலாபூஷணம். ரஷீத் எம் இம்தியாஸ் தலைமை தாங்கினார்.
கவியரங்கில் கவிஞர் ரவூப் ஹஸீர் (கொழும்பு)
கவிஞர் கஸ்ஸாலி அஷ் ஷம்ஸ் (பாணந்துறை)
கவிஞர் நாச்சியாதீவு பர்வின் (ரஜரட்டை)
கவிஞர் புத்தளம் மரிக்கார் (புத்தளம்) ஆகியோரது கவிதைகள்
ககவிராத்திரியை சிறப்பித்ததன.
கவியரங்கின் கவிதைகளை ரசிக்க ஏராளமான மக்கள் கலந்து கொண்டது சிறப்பு.