நிலவில் எட்ட முடியாத இலக்காக நீண்டகாலமாக இருந்து வரும் தென்துருவத்தில் இன்று சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் தரையிறங்கி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மேலும் நிலவின் தென்துருவத்தை பார்த்து உலக நாடுகள் அஞ்சும் நடுங்கும் நிலையில் இந்தியா ரிஸ்க் எடுத்து சாதித்தது ஏன்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சந்திரயான் 3 திட்டம் மூலம் உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புவி வட்டபாதையை கடந்த நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை சென்றன.

 

இதையடுத்து உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. அதன்பிறகு நிலவின் சுற்றுவட்டபாதையில் வலம் வரும் சந்திரயான் 2 திட்டத்தின் ஆர்ப்பிட்டருடன் விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கி நடந்து வந்து. இன்று மாலை 5.44 மணி முதல் விக்ரம் லேண்டர் செங்குத்தாக நிலவின் தென்துருவ நோக்கி‛சாப்ட் லேண்டிங்’ முறையில் தரையிறக்கம் செய்யப்பட்டது. சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி அசத்தியது.

இதையடுத்து 4 மணிநேரம் கழித்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வை தொடங்க உள்ளது. இந்த வேளையில் பிரக்யான் ரோவர் வாகனம் நிலவின் இந்தியாவின் தேசியக்கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவை பொறித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க உள்ளது.

இன்றைய சூழலில் இந்தியாவுடன் சேர்த்து மொத்தம் 4 நாடுகள் நிலவில் தரையிறங்கி உள்ளன. அமெரிக்கா நிலவில் மனிதர்களை தரையிறக்கி மீண்டும் பூமிக்கு அழைத்து வந்துவிட்டது. மாறாக ரஷ்யா, சீனா நாடுகள் விண்கலத்தை நிலவில் தரையிறக்கி தங்கள் நாடுகளின் கொடிகளை அங்கு நட்டு வைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் தற்போது இந்தியா நிலவில் கால்பதித்துள்ளது.இதில் பிற 3 நாடுகளில் இருந்து இந்தியா வேறலெவலில் பிரமிக்க வைக்கும் சாதனையை படைத்துள்ளது. ஏனெ்னறால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை நிலவின் தென்துருவத்தின் பக்கம் சென்றதே இல்லை. மாறாக இந்தியா தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி மாஸ் காட்டி வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா, சீான நஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவின் தென்துருவத்தை ஒதுக்கி வைத்தன் பின்னணியில் முக்கிய காரணங்கள் உள்ளன.

அதாவது நிலவின் தென்துருவத்தின் பெரும்பாலான பகுதிகள் சூரியஒளி படாத இடமாக உள்ளன. இதனால் எப்போதும் அங்கு கும்மிருட்டு சூழ்ந்திருக்கும். அதிகபட்சமாக குளிர் நிலவும். அதிகபட்சம் என்றால் -238 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்குமாம். மேலும் தென்துருவத்தின் பகுதியில் ராட்சத பள்ளத்தாக்குகள் உள்ளன. கரடு முரடான பள்ளத்தாக்குகள் நடுவே சமதள பரப்பை கண்டறிந்து விக்ரம் லேண்டர் உள்பட விண்வெளி ஆய்வு கலன்களை தரையிறக்குவது என்பது மிகவும் சவாலானது. சிறு தவறு ஏற்பட்டாலும் அந்த விண்வெளி திட்டம் என்பது தோல்வியடைந்து விடும்.

மேலும் விண்வெளி கலன்கள், விக்ரம் லேண்டர் உள்ளிட்டவை பெரும்பாலும் சூரியஒளியை பயன்படுத்தி இயங்குவதற்கு தேவையான ஆற்றலை தயாரிக்கும் வகையில் பேனல்கள், பேட்டரிகளுடன் செயல்படும். சூரியஒளியே தென்துருவத்தில் கிடைப்பது சிரமம் என்ற நிலையில் விண்வெளி கலன்கள் இயங்காமல் போகலாம். இதுபோன்ற பிரச்சனைகளால் பிற நாடுகள் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளன.

மேலும் நிலவை பொறுத்தமட்டில் ஒரு நாள் என்பது 14 பூமி நாட்களாகும். அதாவது இந்தியாவில் 12 மணிநேரம் பகல், 12 மணிநேரம் இரவு என்பது ஒருநாளாக இருக்கும் வேளையில் நிலவில் 14 நாட்கள் பகல், 14 நாட்கள் இரவாக இருக்கும். இதனால் அங்கு இரவு, பகலை கண்டறிந்து சரியான நேரத்தில் விண்வெளி கலன்களை தரையிறக்கம் செய்ய வேண்டும். இந்தியா இன்று விக்ரம் லேண்டரை பகல் நேரத்தில் தரையிறக்கி உள்ளது. இன்று முதல் 14 நாட்கள் அங்கு சூரியஒளி இருக்கும். இதனை பயன்படுத்தி தான் லேண்டர், ரோவர் ஆகியவை 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

 

இந்தியாவை பொறுத்தமட்டில் இன்னொரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திராயான் 3 ஆகிய திட்டங்களின் பிரதான நோக்கமே நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வது என்பது தான். இப்படி விடா முயற்சி செய்து இந்தியா இன்று யாரும் எட்ட முடியாத இலக்கு என கணித்து வைக்கப்பட்டு இருந்த நிலவின் தென்துருவத்தில் கால்பதித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியா பக்கம் திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் 3 தரையிரங்களை அரசியல் தலைவர்கள் திரையுல பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *