13ஐ முழுமையாக‌ அமுல்ப‌டுத்தி மாகாண‌ ச‌பை தேர்த‌லை ந‌ட‌த்தும் ப‌டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் சம்ப‌ந்த‌ன் ஜ‌னாதிப‌திக்கு க‌டித‌ம் எழுதியிருப்ப‌த‌ன் மூல‌ம் மாகாண‌ ச‌பை தேர்த‌ல் ந‌ட‌க்காமைக்கான‌ கார‌ண‌ம் த‌மிழ் கூட்ட‌மைப்பும் ஹ‌க்கீமும், ம‌னோ க‌ணேச‌ன் போன்றோரும்தான் என்ற‌ உண்மையை ம‌றைத்து நாட்டு ம‌க்க‌ளை ஏமாற்ற‌ முய‌ற்சி செய்கிறார் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து,
13ஐ முழுமையாக‌ அமுல்ப‌டுத்தாத‌ நிலையில்தான் 88ம் ஆண்டு முத‌ல் மாகாண‌ ச‌பைத்தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து என்ப‌து ச‌ம்ப‌ந்த‌னுக்கு தெரியாதா?

13ந்திருத்த‌ ச‌ட்ட‌ப்ப‌டிதான் மாகாண‌ ச‌பையே அமுலுக்கு வ‌ந்த‌து. அத‌ன்ப‌டியே கிழ‌க்கு மாகாண‌ வ‌ட‌ மாகாண‌ ச‌பை தேர்த‌ல்க‌ளின் போது த‌மிழ் கூட்ட‌மைப்பும் போட்டியிட்ட‌து.

இப்போது மாகாண‌ ச‌பை தேர்த‌ல் ந‌ட‌க்க‌ முடியாமைக்கு யார், என்ன‌ கார‌ண‌ம் என்ப‌து ச‌ம்ப‌ந்த‌னுக்கு தெரியாதா என்று கேட்கிறோம்.

சும்மா கிட‌ந்த‌ ச‌ங்கை ஊதி கெடுத்த‌து போல் 2017ம் ஆண்டு பாராளும‌ன்ற‌த்தில் மாகாண‌ ச‌பை தேர்த‌ல் திருத்த‌ ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ போது அதை நிறைவேற்றி மாகாண‌ ச‌பையை ஒழிக்க‌ த‌மிழ் கூட்ட‌மைப்பின் சும‌ந்திர‌னும் ர‌வூப் ஹ‌க்கீமுமே முன்னின்ற‌ன‌ர். ஹ‌க்கீம் கை உய‌ர்த்திய‌தை பார்த்து ரிசாத் ப‌தியுதீனும் கை உய‌ர்த்திய‌தாக‌ கூறினார்.

இத்திருத்த‌ம் பாராளும‌ன்றில் நிறைவேற்ற‌ப்ப‌ட்டு எல்லை நிர்ண‌ய‌ம் செய்த‌பின்தான் தேர்த‌ல் என்ற‌ நிலையை ச‌ம்ப‌ந்த‌னும் சேர்ந்து ச‌தி செய்து விட்டு இப்போது ஒண்ணுந்தெரியாத‌ பாப்பா போல் ஜ‌னாதிப‌திக்கு க‌டித‌ம் எழுதி ப‌கிடி ப‌ண்ணுகிறார்.

க‌ண்கெட்ட‌ பின் ந‌ம‌ஸ்கார‌ம் என்ப‌து போல் சும‌ந்திர‌னும் ப‌ழைய‌ விகிதாசார‌ முறைப்ப‌டி தேர்த‌ல் ந‌ட‌த்த‌ கோருகிறார். அவ்வாறாயின் இது விட‌ய‌ம் மீண்டும் பாராளும‌ன்ற‌த்துக்கு கொண்டு வ‌ர‌ப்ப‌ட்டு மூன்றில் இர‌ண்டால் வெற்றிபெற்றால் ம‌ட்டுமே தேர்த‌ல் ந‌ட‌த்த‌ முடியும் என்ப‌து ஆயுட்கால‌ம் முழுவ‌தும் நாடாளும‌ன்ற‌த்தில் இருக்கும் ச‌ம்ப‌ந்த‌னுக்கு தெரியாதா?

இன்றைய‌ சூழ்நிலையில் ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பின் ஆத‌ர‌வின்றி பாராளும‌ன்றில் மூன்றில் இர‌ண்டு கிடைக்க‌வே கிடைக்காது. அது வ‌ரை மாகாண‌ ச‌பை தேர்த‌லை ந‌ட‌த்தும்ப‌டி ஜ‌னாதிப‌தியிட‌ம் கோருவ‌து சின்ன‌ப்பிள்ளைத‌ன‌மாகும்.

ஆக‌வே மாகாண‌ ச‌பை தேர்த‌ல் ந‌ட‌க்காமைக்கும் 13ஐ முழுமையாக‌ அமுல்ப‌டுத்துவ‌த‌ற்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை என்ப‌தால் 2017ம் ஆண்டு த‌மிழ் கூட்ட‌மைப்பும் சேர்ந்து தேர்த‌ல் திருத்த‌ ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ந்த‌மை கார‌ண‌மாக‌வே தேர்த‌ல் ந‌ட‌க்காமல் உள்ள‌து என்ப‌தால் திரு. ச‌ம்ப‌ந்த‌ன் இத‌ற்காக‌ நாட்டு ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்னிப்பு கேட்க‌வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *