கடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு 27.05.2023 சனிக்கிழமை கொட்டகலையில் நடைபெற்றது.
கொட்டகலை தனியார் விடுதி ஒன்றி இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கந்தசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது வீர வீராங்கனைகளின் சிலம்பம் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றது. மேலும் இதில் பதக்கங்கங்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.
இலங்கை, இந்தியா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, டுபாய், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற இந்த முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இலங்கை வீர விராங்கணைகள் 9 தங்கம் உட்பட 69 பதங்கங்களை வெற்றிக் கொண்டுள்ள அதே நேரம் இந்திய முதலாம் இடத்தையும் மூன்றாம் இடத்தை சுவிஸ்லாந்தும் பெற்றுக் கொண்டதாக இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் பொது செயலாளரும் பிரதம பயிற்றுவிப்பாளருமான இராமர் திவாகரன் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)