மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை. பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவானது நேற்றைய தினம் சிறைப்பிடித்த சம்பவத்தின் போது அங்கு அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட பிக்கு எனது பெயரை சொல்லி அங்கு சென்றவர்களுக்கும் பாரிய எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருந்தார். என பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளுக்கும் அவரை சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை. சர்வதேச குற்றவியல் சட்டம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு ICCPR Act No 56 of 2007- INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS.)
இவ் பிக்குவானது கைது செய்யப்பட வேண்டும். தமிழருக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஓர் நீதியா? எல்லா வகையிலும் காலம் காலமாக பாதிக்கப்படுவது தமிழ் பேசும் மக்களே. இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எம்மால் இயன்ற அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம்.
அவ் பிக்கு சொல்வதை போன்று எமது மக்களின் இவ் பிரச்சனைக்கு தமிழரசுக் கட்சியும் நானுமே அழுத்தம் கொடுத்து வருகின்றோம் மற்றைய குறிப்பாக அரச சார் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மௌனம் மிகுந்த சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது. என அவரது அறிக்கையில் கூறி இருக்கிறார்