பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அங்கு 21 பேர் உயிரிழந்தனர். தீ பரவியதால் கட்டிடத்தில் இருந்து சிலர் போர்வைகளை பயன்படுத்தி வெளியே குதிக்க முயற்சிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறன்.
நேற்று (18) மதியம் 01 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில்இ தீயணைப்புத் திணைக்களம் உரிய முறையில் செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு சுமார் 70 பேர் மீட்பு குழுவினரால் காப்பாற்றப்பட்டனர்.