39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளானது.
மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு சீன வெளியுறவு அமைச்சகம் பல நாடுகளுக்கு தங்கள் தூதரகங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த கப்பலில் 17 சீன பிரஜைகள் 17 இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் காணாமல் போயுள்ளனர்.