சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சூதாட்டத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் வரி வருவாயை முறையாக சேகரிப்பது, சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுப்பது மற்றும் தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் சூதாட்டத்தின் எதிர்மறையான விளைவுகளைக் குறைத்தல் போன்ற பணிகளை இது மேற்கொள்ள வேண்டும்.
ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவதற்கான வரைவு சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய பின்னடைவு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.