ஒடிசாவில் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னைசென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது.
சரக்கு ரயில் உடன் ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேருக்கு நேர் மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 7 – 8 பெட்டிகள் தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரத்தில் இதே எதிர் தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் வந்துள்ளது.
அதனை நிறுத்த முடியாத நிலையில்தான் ஏற்கனவே தடம் புரண்டிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்து ஏற்பட யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயிலின் 2 – 3 பெட்டிகள் தடம் புரண்டன.
மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து ஏற்பட்ட பகுதியில் Nஆய் மேற்கொண்டுள்ளார்.
மீட்பு பணிகள் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மத்திய மந்திரி உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.