ஐரோப்பிய நாடுகளில் தனது பைக் டூர் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் நடிகர் அஜித.
தற்போது இலங்கை விஜயம் செய்திருக்கும் லைக்கா குழும நிறுவனர் அ.சுபாஸ்கரன் அவர்களின் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ” விடாமுயற்சி ” படத்தில் அஜித்குமார் நடிக்க இருக்கிறார்.
இந்த திரைப்பட வேளைகள் மே மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கதையில் ஏற்பட்ட மாற்றங்கள், லைக்கா நிறுவன மீதான அமுலாக்க பிரிவு சோதனை இதனால் படத்தின் ஆரம்ப பணிகள் தாமதமானது.
இதனால் நடிகர் அஜித்குமார் தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை ஐரோப்பிய முழுவதும் மேற்கொண்டு முடித்தார்.
தற்போது சென்னை திரும்பியிருக்கும் அஜித்குமார் அவர்கள் செப்டம்பர் மாதம் முழுவதும் உடற்பயிற்சியில் ஈடுப்பட்ட பின்னர் படப்பிடிப்பு ஆக்டோபர் மாதமா முதல் வாரம் ஆரம்பமாகும் என படத்தயாரிப்பாளர் தரப்பில் கூறுகின்றனர்.
அத்துடன் ” விடாமுயற்சி” படத்தை வேறு திறுவனம் கையேற்க நினைப்பது வீன் முயற்சி என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.