“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்கள் நீங்கள் தற்போதும் இரவோடு இரவாக சென்று அவரோடு பேசுகிறீர்கள் ஆனால் அது விஷயமல்ல ..
கடந்த ஐந்து வருடங்களில். 5 வருடங்களில் உங்களால் 7 பேர்ச் காணி கொடுக்க முடியாமல் போனாது ஏன்? “
என்ற கேள்வியை கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அலுத்கமே தமிழ் முற்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே மஹிந்தானந்த அலுத்கமகே இதனை கூறினார்.
கண்டி மாவட்த்தின் தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினரான வேலு குமார் அவர்கள் விவாதத்தின் இடை நடுவே கேள்வியொன்றை கேட்டார்.
” ஹிம்புல்பிட்டிய தோட்டத்திலே 150 ஏக்கர் காணிகளை பொறுப்பேற்ற நீங்கள் இவ்வளவு பாசமாக தோடட மக்களுக்கா கொடுத்தீர்கள் ..முன்னால் இருக்கும் லயங்களை விட்டு ஏன் மற்றவர்களுக்கு கொடுத்தீர்கள் என்ற கேள்வியை வேலுகுமார் MP கேட்டார்.
இதற்கு பதலளித்த அவர் தாம் காணிகளை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் கொடுத்ததாக கூறினார்.
மேலும் கலப்பொட பிரதேசத்தில் தமிழ் இளைஞர்களுக்கு 1/2 ஏக்கர் காணி கொடுத்தேன். ஆனால் கடந்த 5 வருஷத்தில் உங்களால் 7 பேர்ச் காணி கொடுக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்வியை அவர் தமிழ் முற்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து கேட்டார்.