இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக “கணினி செயலிகளை ” உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் அரச நிறுவனங்களுக்காக “கணினி செயலிகளை” உருவாக்கும் பணி தனியார் நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனங்களினாலேயே இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஆளும் மற்றும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்க நிதிக்குழுவின் புதிய தலைவராக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பி கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு முன்மொழிந்தார்.