( நூரளை பி. எஸ். மணியம்)
எமது சமூகத்திற்கு நன்மை கிடைக் குதோ அல்லது கிடைக்கவில்லையோ கிடைக்கும் சந்தர்ப்பத்தை நலுவவிட கூடாது. புத்திரசிகாமணி கூறுகின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மலையக சமூதாயத்தின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு அழைப்பு விடுத்ததிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் என்ற முறையில் இந்த சந்தர்ப்பத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியினர் விட்டுக்கொடுத் திருக்க கூடாது. ஏனென்றால் மிக முக்கியமாக விடுதலை புலிகளுக்கு கிடைத்த பல சந்தர்ப்பத்தை விட்டுக் கொடுத்த அந்த இயக்கத்தையை அழிக்ககூடிய சந்தர்ப்பத்தை சிங்கள அரசுக்கு வழங்கியிருக்கின்றார்கள் . என்று நான் நினைக்கின்றேன்.
எனவே மலையக மக்கள் சம்பந்தமாக குடியேறி 200 வருடங்கள் என்று கூறினாலும் கூட சரியான முறையில் 1977 ஆம் ஆண்டுக்கு பிறகுதான் எங்களுடைய மக்களின் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
என முன்னாள் சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த 1977 ஆம் ஆண்டுக்கு முன் முன்னாள் பிரதமர் அமரர் திருமதி சிறிமா பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் எங்களது பல கல்விமான்களுக்கு வசதிகள் செய்து கொடுத்ததையும் அன்று அஸீஸ் போன்ற தலைவர்கள் அதற்கு முன்னின்று செயல்பட்டார் கள் என்பதை இந்த நேரத்தில் மறந்துவிட முடியாது.
எனவே இன்று இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் விட்டுக்கொடுக்ககூடாது. ஏனென்றால் இதில் எங்களிடையே பிரிவினை ஏற்பட்டிருக்கின்றது என்பதை எடுத்து காட்டுகின்றது. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் , முன்னாள் தமிழ் முற்போக்கு கூட்டனி உறுப்பினரும் கல்வி பிரதியமைச் சருமான அரவிந்த குமார் ஜனாதிபதியின் அழைப்யேற்று பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டுள்ளனர்.
எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி யினரும் அதேபோல் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தில் பொதுச் செயலாளராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர்களும் கலந்துக் கொள்ள வில்லை. வடிவேல் சுரேஷ் தற்பொழுது ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கின்றாரா ?அல்லது வேறு கட்சியில் இருக்கின்றாரா? என்று தெரியவில்லை.ஆனாலும் அவர் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பவர் அவரும் கலந்துக் கொள்ளாமல் இருந்தது வருந்த தக்க விடயமாகும்.
ஏனென்றால் எங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத் திக் கொள்ள வேண்டும். யார் அழைத்தாலும் சரி பிரச்சனைகளில் ஏதாவது தீர்வு கிடைக்கும். என்ற நம்பிக்கையில் நாம் செல்ல வேண்டும். அப்படி நம்பிக்கையில் சென்ற பிறகு பிரச்சனைகள் தீராவிட்டால் உலக அரங்கில் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எடுத்து செல்லமுடியும். எங்களது பிரச்சனைகளை முன் வைத்தோம். அரசாங்கம் எங்களுக்கு சரியான தீர்வு வழங்கவில்லை. என்று எங்களது பிரச்சனைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
எனவே நாங்கள் 200 வருடங்கள் என்று நாங்கள் கூறும் பொழுது மன்னாரிலிருந்து மாத்தளைக்கு வந்த காலக்கட்டத்தை சொல்லுகின்ற பொழுது 1823 இல் இருந்து1900 வரை மன்னாரிலிருந்து மாத்தளை வரை வந்திருக்கின்றோம்.அதற்கு பிறகு அந்த மன்னார் பாதை மூடப்பட்டு கப்பல் மூலம் கொழும்பிற்க்கு வந்துள்ளோம். இதையெல்லாம் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.எனவே எமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்க்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாம் தவற விட கூடாது. என புத்திரசிகாணி மேலும் கூறினார்.