ஜப்பானில் நடந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாகானோவில் உள்ள உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் கூர்மையான ஆயுதம் மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
தாக்குதல்தாரி அடையாளத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிந்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், அப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களை பாடசாலைகளிலேயே தங்க வைக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜப்பானில் துப்பாக்கி சூடு போன்ற குற்றங்கள் மிகவும் அரிது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
துப்பாக்கி வைத்திருக்க விரும்புவோருக்கு உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பு கடுமையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.